UPDATED : ஜன 13, 2024 12:00 AM
ADDED : ஜன 13, 2024 10:54 AM
அரசு பள்ளிகளில், முன்பெல்லாம், ப்ராக்ரஸ்ரிப்போர்ட் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. காலப் போக்கில், இந்த ஒழுங்குமுறை கைவிடப்பட்டது. தற்போது, சில தலைமை ஆசிரியர்கள் மற்றும்வகுப்பாசிரியர்களின் ஆர்வத்தின் அடிப்படையிலேயே, மாணவர்களுக்கு தேர்ச்சி விபர அட்டைகள் வழங்கப்படுகின்றன. அதனால், பல மாவட்டங்களில் அரசு பள்ளி மாணவர்களின் செயல்பாடுகளை, பெற்றோர் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.இந்நிலையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், இந்த ஆண்டு முதல், தேர்ச்சி அட்டைகளை கட்டாயம் வழங்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.தேர்வு மதிப்பெண், கல்வி சார் இணை செயல்பாடுகள், வருகைப்பதிவுடன் கூடிய, கிரேடு முறை இந்த அட்டைகளில் குறிப்பிடப்படும். இந்த அட்டைகளை அச்சிடுவதற்கு, 1.02 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.