sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க திட்டம்

கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க திட்டம்

கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க திட்டம்


UPDATED : ஜன 13, 2024 12:00 AM

ADDED : ஜன 13, 2024 04:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2024 12:00 AM ADDED : ஜன 13, 2024 04:48 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வால்பாறை:
வால்பாறையில், தேயிலை தொழிலுக்கு மாற்றுத்தொழில் இல்லாததால், படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக வெளியூர்களுக்கு செல்கின்றனர்.இந்நிலையில், கோவை பால் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் கோவை ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் இணைந்து, தேயிலை அல்லாத மாற்றுத்தொழில் உருவாக்கும் வகையில் வால்பாறை நகரில் ஆவின் பால் கொள்முதல் நிலையம் துவக்கியது.இதன் துவக்க விழாவுக்கு வால்பாறை பால் உற்பத்தியாளர் நல சங்க செயலாளர் பொன்காமராஜ் தலைமை வகித்தார். கோவை மாவட்ட ஆவின் பால் விற்பனை பிரிவு பொதுமேலாளர் பாலபூபதி, துணை பொதுமேலாளர் தனபால், கூட்டுறவு சார் பதிவாளர் சபரிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டு, பால் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தனர்.அதிகாரிகள் பேசுகையில், வால்பாறை நகரில் தேயிலை அல்லாத மாற்றுத்தொழில் உருவாக்கும் வகையிலும், கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையிலும், ஆவின் பால் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.பால் விற்பனையாளர்களுக்கு, அவர்களுக்கான தொகையை வங்கி கணக்கில் செலுத்தப்படும். அரசு நிர்ணயித்துள்ள விலையில் பால் பெறப்படும். மாடு வளர்ப்போருக்கு, 80 ஆயிரம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us