UPDATED : ஜன 13, 2024 12:00 AM
ADDED : ஜன 13, 2024 04:54 PM
புதுச்சேரி:
துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வரும் 29ம் தேதி புதுச்சேரி வர உள்ளார்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நடந்த பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் வரும் 29 ம் தேதி துணை ஜனாபதிபதி ஜகதீப் தன்கார் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். அதன்பின்பு புதுச்சேரி அரசு சார்பில் நடக்கும் விழாக்களில் பங்கேற்க உள்ளார். இதற்காக துணை ஜனாதிபதி துவக்கி வைக்க உள்ள திட்டங்களை பட்டியலிட்டு சமர்ப்பிக்க அரசு துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுச்சேரி அரசு மேற்கொண்டு வருகிறது.