தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே தொடரும்: தமிழக அரசு
தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே தொடரும்: தமிழக அரசு
UPDATED : ஜன 14, 2024 12:00 AM
ADDED : ஜன 14, 2024 06:04 PM
சென்னை:
தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே தொடரும். மும்மொழிக் கொள்கை வர ஒரு போதும் வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய கல்விக் கொள்கையின் படி தமிழக அரசு செயல்படுகிறது என்பது சொல்வது நகைப்புக்குரியது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பகல் கனவு காண்பது போல் மும்மொழிக் கொள்கை ஒருபோதும் உருவாக வாய்ப்பில்லை. செயற்கை நுண்ணறிவுக்கென தனியே ஒரு கொள்கை தமிழகத்தில் 2020ல் உருவாக்கப்பட்டது.தேசிய கல்விக் கொள்கை என்கிற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இவையெல்லாம் நடந்தன. தொழில்நுட்பத்தில் தமிழகமே முன்னோடி. தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. தொழில்நுட்பம் சார்ந்து தமிழகத்துக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை. தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே தொடரும். மும்மொழிக் கொள்கை வர ஒரு போதும் வாய்ப்பில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.