துணை ஜனாதிபதி பெயரே தெரியாமல் ஆசிரியர் பணிக்கு தேர்வு
துணை ஜனாதிபதி பெயரே தெரியாமல் ஆசிரியர் பணிக்கு தேர்வு
UPDATED : ஜன 15, 2024 12:00 AM
ADDED : ஜன 15, 2024 11:41 AM
பாட்னா:
பீகார் மாநில தேர்வானையத்தால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு துணை ஜனாதிபதியை தெரிந்து வைத்திருக்க வில்லை என்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.பீகாரில் மாநிலம் முழுவதும் ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் சுமார் 96, 823 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் நிதிஷ்குமார். இதனிடையே பிபிஎஸ்சி சார்பில் இரண்டாம் கட்டமாக தற்காலிக நியமன கடிதங்களை பெறுவதற்காக வந்திருந்த 26,000 ஆசிரியர்களிடம் அறிவுத்திறனை சோதிக்க களம் இறங்கியது தனியார் செய்தி சேனல் ஒன்று. அந்த சேனல் நிறுவனம் பணி நியமனம் பெற்றவர்களில் இருந்து ஒரு சிலரிடம் பேட்டி கண்டது. அவர்களிடம் மொத்தம் மூன்றே கேள்விகள் தான் கேட்கப்பட்டது.கேள்வி ஒன்று: பிபிஎஸ்சி என்றால் என்ன?( பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்)கேள்வி இரண்டு:பிபிஎஸ்சியின் தற்போதைய தலைவர் பெயர் என்ன?( பிபிஎஸ்சி தலைர் : அதுல் பிரசாத்)கேள்வி மூன்று: நாட்டின் தற்போதைய துணை ஜனாதிபதி பெயர் என்ன?(ஜகதீப் தங்கர்)பேட்டி அளித்தவர்களில் பெரும்பாலானோருக்கு முதல் கேள்விக்கு விளக்கம் சொல்ல தெரியவில்லை. இரண்டாம் கேள்விக்கு கே.கே. திவாரி என்றும் ஆனந்த்கிஷோர் என்றும் கூறிச்சென்றனர்.இதில் ஆச்சரியமான விசயம் ஆசிரியர்கள் மூன்றாவது கேள்விக்கு அளித்த பதில்தான். இந்த கேள்விக்கு நிறைய ஆசிரியர்கள் பதில் அளிக்க சிரமப்பட்டனர். ஆசிரியர்களில் ஒருவர் மட்டும் சந்தேகத்துடன் வெங்கையா நாயுடு என கூறினார். இதனையே மற்ற ஆசிரியர்கள் அனைவரும் கூட்டாக வெங்கையா நாயுடு என பதில் அளித்தது தான் சுவராஸ்யம்.