sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மலையில் ட்ரோன் பயன்படுத்திய பத்திரிகையாளருக்கு நோட்டீஸ்

/

மலையில் ட்ரோன் பயன்படுத்திய பத்திரிகையாளருக்கு நோட்டீஸ்

மலையில் ட்ரோன் பயன்படுத்திய பத்திரிகையாளருக்கு நோட்டீஸ்

மலையில் ட்ரோன் பயன்படுத்திய பத்திரிகையாளருக்கு நோட்டீஸ்


UPDATED : ஜன 15, 2024 12:00 AM

ADDED : ஜன 15, 2024 11:43 AM

Google News

UPDATED : ஜன 15, 2024 12:00 AM ADDED : ஜன 15, 2024 11:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாம்ராஜ்நகர்:
பண்டிப்பூர் புலிகள் சரணாலய பகுதி ஹிமவத் கோபாலசுவாமி மலையில், கேமராவில் படப்பிடிப்பு நடத்திய பத்திரிக்கையாளர் விஸ்வேஸ்வர பட்டுக்கு, வனத்துறை நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.சாம்ராஜ்நகரின், பண்டிப்பூர் புலிகள் சரணாலய பகுதியின், ஹிமவத் கோபாலசுவாமி மலை வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். தினமும் இங்கு நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். ஹிமவத் கோபாலசுவாமி கோவிலுக்கு பக்தர்களும் பெருமளவில் வருகின்றனர். வார இறுதி நாட்களில் இவர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும்.ஹிமவத் கோபால சுவாமி மலை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் ட்ரோன் கேமரா பயன்படுத்த அனுமதி இல்லை. ஆனால், சமீபத்தில் பத்திரிக்கையாளர் விஸ்வேஸ்வர பட், வனத்துறையிடம் அனுமதி பெறாமல், ட்ரோன் கேமரா பயன்படுத்தி, படப்பிடிப்பு நடத்திஉள்ளார்.படங்களை சமூக வலைதலத்தில் வெளியிட்டுள்ளார். இதை கவனித்த கோபால சுவாமி மலை மண்டல வனத்துறை அதிகாரி, காரணம் கேட்டு விஸ்வேஸ்வர பட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.மலையில் அனுமதி இல்லாமல், ட்ரோன் கேமரா பயன்படுத்தி, படப்பிடிப்பு நடத்தி, படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளீர்கள். இது வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் - 1972ன் பிரிவு 28, 1(பி) மீறலாகும்.மலை அடிவாரத்தில் இருந்து, மலைக்கு செல்ல மாலை 4:00 மணி வரை மட்டும் அனுமதி உள்ளது. நீங்கள் மாலை 6:00 மணி வரை இருந்து படங்கள் எடுத்துள்ளீர்கள். நீங்கள் உடனடியாக வனத்துறை அலுவலகத்துக்கு வந்து, விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us