ஆறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி: இலவச மருத்துவ சேவை, புற்று நோய் சிகிச்சைக்கு தனிப்பிரிவு
ஆறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி: இலவச மருத்துவ சேவை, புற்று நோய் சிகிச்சைக்கு தனிப்பிரிவு
UPDATED : ஜன 16, 2024 12:00 AM
ADDED : ஜன 16, 2024 05:25 PM
பாகூர்:
புதுச்சேரி - கடலுார் சாலை கிருமாம்பாக்கத்தில் உள்ள, ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை 24ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.சேலம் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் வேந்தர் கணேசன், இயக்குனர் அனுராதா கணேசன் வழிகாட்டுதலில் செயல்பட்டு வரும் இம்மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், பல்வேறு சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகின்றன. புதுச்சேரி, தமிழக பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.இங்கு, மகப்பேறு, எலும்பு முறிவு, மூட்டு சிகிச்சை, தோல் நோய், இதய நோய், புற்று நோய் சிகிச்சை மையம், வயிறு மற்றும் குடல் நலப்பிரிவு, சிறுநீரகம், பிசியோதெரபி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகளும், வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவும் இயங்கி வருகிறது.உலகத்தரம் வாய்ந்த அதிநவீன கணினிமயமாக்கப்பட்ட ரத்த பரிசோதனை மையம், குறைந்த கட்டணத்தில் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், மூளை மற்றும் தண்டுவடம் பரிசோதிக்கும் அதிநவீன சிடி மற்றும் 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி உள்ளது.பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும்முன் கண்டறிய, மெமொகிரம் எனப்படும் மார்பக கட்டி கதிரியக்க சோதனை வசதி, புதுச்சேரியில் முதல் முறையாக எலும்பு சத்து தரம் ஆய்வு சோதனை கூடம், உள்ளிருப்பு நோயாளிகளுக்கு கட்டணமில்லா வார்டுகள், இலவச உணவு, குறைவான கட்டணத்தில் சிறப்பு ஏ.சி. வார்டுகள் உள்ளன.இங்கு பிரசவம் செய்து கொள்ளும் பெண்களுக்கு, அன்னை அன்னபூரணி மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல நிதியுதவி திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.பிரதமரின் காப்பீடு திட்டம் மற்றும் தமிழக முதல்வரின் விரைவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இம் மருத்துவமனை தற்போது 24ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.