குடியரசு தின அணிவகுப்பு திருப்பூர் மாணவர் பங்கேற்பு
குடியரசு தின அணிவகுப்பு திருப்பூர் மாணவர் பங்கேற்பு
UPDATED : ஜன 18, 2024 12:00 AM
ADDED : ஜன 18, 2024 09:45 AM
திருப்பூர்:
சென்னையில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பு மரியாதையில் பங்கேற்க, திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வரும் 26ம் தேதி, சென்னையில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழகம் முழுதும் உள்ள பல்கலையில் இருந்து, 120 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவ்வகையில், கோவை பாரதியார் பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரியில் இருந்து ஒன்பது பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களில் திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை மாணவர் செர்லினும் ஒருவர்.குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வாகிய ஒரே மாணவரான செர்லினை, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், நாட்டு நலப்பணித் திட்ட அலகு - 2, ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள் பாராட்டினர்.கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கூறுகையில், டில்லி மற்றும் சென்னையில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தலா இருமுறை எங்கள் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். மாணவர் செர்லினை பரிந்துரை செய்த மாநில என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் செந்தில்குமார், பாரதியார் பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.