வேளாண் மாணவர்கள் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத் செயல்பாடுகள்
வேளாண் மாணவர்கள் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத் செயல்பாடுகள்
UPDATED : ஜன 20, 2024 12:00 AM
ADDED : ஜன 20, 2024 10:07 AM
கோவை:
கோயம்புத்தூர் அருகே, அமிர்தா வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில், பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு நடைபெற்றது.கிணத்துக்கடவு, அரசம்பாளையம் அமிர்தா வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள் சார்பில் பொட்டையாண்டிபுரம்பு கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கிராமப்புற மதிப்பீடு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ராம் குமார் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்துகொண்டு பயிர் பருவகால நாட்காட்டி மற்றும் சிக்கல் மரம் ஆகிய செயல்பாடுகளை மேற்கொண்டனர்.பயிர் பருவகால நாட்காட்டி, இந்த செயல்பாட்டில் ஒரு இடத்தில் பல கட்டங்கள் வரைந்து இரு பக்கமாகப் பிரித்து ஒரு பக்கத்தில் அவர்கள் பயிர் செய்கின்ற பெரும்பாலான பயிர்களும் வைக்கப்பட்டு, அதற்கு நேர் எதிராக தமிழ் மாதங்கள் எழுதப்பட்டு எந்தப் பயிர் எந்த மாதத்தில் விளைகின்றன என்பதை அறிந்து அவர்கள் அந்த மாதத்தில் கற்களை வைத்து அடையாளம் காட்டினர். இதனால் மாணவர்களுக்கு எந்த மாதத்தில் எந்த பயிர் வளர்க்கலாம் என்ற தெளிவு ஏற்பட்டது.சிக்கல் மரம், இந்த செயல்பாட்டில் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை ஒரு மின்னட்டையில் எழுதி, அதனால் வரக்கூடிய பாதிப்புகளையும் எழுதி சிக்கல் மரத்தில் விவசாயிகளை வைத்தே கட்டவைக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு விவசாயத்தில் ஏற்படும் சிக்கல் மற்றும் பிரச்னைகளை பற்றி அறிய முடிந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் சுதீஷ் மணாலில், பேராசிரியர்கள் முனைவர் சிவராஜ், முனைவர் சத்யப்பிரியா, முனைவர் இனிய குமார், முனைவர் அரவிந்த், முனைவர் வினோதினி ஆகியோரின் வழி காட்டுதலால் இந்த நிகழ்வானது நடைபெற்றது.