அக்னி தீர்த்தம் டூ கோயிலுக்கு பேட்டரி காரில் வரும் பிரதமர்
அக்னி தீர்த்தம் டூ கோயிலுக்கு பேட்டரி காரில் வரும் பிரதமர்
UPDATED : ஜன 20, 2024 12:00 AM
ADDED : ஜன 20, 2024 10:18 AM
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் பிரதமர் மோடி நீராடிய பின் பேட்டரி காரில் கோயிலுக்கு வருகிறார்.இன்று(ஜன.20) ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்திறங்கியதும் காரில் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரை செல்கிறார். இங்கு புரோகிதர்கள் நடத்தும் சங்கல்பம் மற்றும் சிவ பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுகிறார்.பின் அங்கிருந்து பேட்டரி காரில் 200 மீ.,ல் உள்ள கோயில் கிழக்கு கோபுர நுழைவு வாசலுக்கு வருகிறார். அப்போது கோயில் சன்னதி தெருவில் சாலையின் இருபுறத்திலும் கூடியிருக்கும் மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.பிரதமர் அக்னி தீர்த்தத்தில் நீராட உள்ளதால் இன்று காலை முதல் பக்தர்கள் நீராட போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால் நேற்று அக்னி தீர்த்த கடற்கரை முழுவதும் நகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணி செய்தனர். கடற்கரை முழுவதும் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.