sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி ஆசிரியைக்கு மாணவர்கள் தங்க நகை பரிசு

பள்ளி ஆசிரியைக்கு மாணவர்கள் தங்க நகை பரிசு

பள்ளி ஆசிரியைக்கு மாணவர்கள் தங்க நகை பரிசு


UPDATED : ஜன 20, 2024 12:00 AM

ADDED : ஜன 20, 2024 10:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2024 12:00 AM ADDED : ஜன 20, 2024 10:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தட்சிணகன்னடா:
அரசு நிதியுதவி பெறும் பள்ளியில், 30 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியையின் சேவையை பாராட்டி, மாணவர்கள் தங்க நகை பரிசளித்தனர்.தட்சிண கன்னடா, பண்ட்வாலின், பாணி மங்களூரின், அக்கரங்கடி கிராமத்தில் தாருல் இஸ்லாம் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளி உள்ளது. இதில் ஜெயலட்சுமி பட் என்பவர், 28 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றினார். 2020ல் ஓய்வு பெற்றார்.ஆனால், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்ததால், அவர் அதே பள்ளியில் ஊதியம் பெறாமல் ஆசிரியையாக பணியை தொடர்ந்தார். 31 ஆண்டுகளாக பணியாற்றிய அவர், சிறந்த மாணவர்களை உருவாக்கி, அனைவருக்கும் பிடித்தமானவராக இருந்தார்.தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார். அவருக்கு பிரிவு உபசார விழா நடத்த, இன்னாள், முன்னாள் மாணவர்கள் திட்டமிட்டனர். அவருக்கு மறக்க முடியாத நினைவுப் பரிசு வழங்க விரும்பினர். முன்னாள் மாணவர்கள், வாட்ஸாப் குரூப்பில் ஆலோசனை நடத்தினர்.தாங்களே பணம் திரட்டி, 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நெக்லஸ், கம்மல் வாங்கினர். இதை ரகசியமாக வைத்திருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, பள்ளி ஆண்டு விழா நடந்தது.இதில் ஆசிரியை ஜெயலட்சுமியை கவுரவித்து, பரிசளித்தனர். மாணவர்கள் தனக்கு தங்க நகை பரிசளித்ததை கண்டு, ஆசிரியை இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us