வரையாடுகள் தின விழிப்புணர்வு போட்டி: வென்றவர்களுக்கு பரிசு
வரையாடுகள் தின விழிப்புணர்வு போட்டி: வென்றவர்களுக்கு பரிசு
UPDATED : ஜன 21, 2024 12:00 AM
ADDED : ஜன 21, 2024 09:47 AM
ஊட்டி:
வரையாடுகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு போட்டியில், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, அக்., 7ல் வரையாடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு ஐந்தாண்டு திட்டம் அறிவிக்கப்பட்டு, அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ஊட்டி அரசு கலைக்கல்லுாரியில், முக்கூர்த்தி தேசிய பூங்கா சார்பில், வரையாடுகள் பாதுகாப்பு குறித்து, பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா மற்றும் கவிதை என அறிவுத்திறன் விழிப்புணர்வு போட்டி நடந்தது.தொடர்ந்து, வரையாடு உருவ மாதிரி மனித சங்கிலி நடத்தப்பட்டது. இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் ஊழியர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, துணை இயக்குனர் வித்யா பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.பிறகு, மாணவர்கள் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டு, யானை மற்றும் மான் உள்ளிட்ட வன விலங்குகள் காண்பிக்கப்பட்டது. இதில், வனத்துறையினர் உடன் சென்றனர்.