sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வனத்துறை வாகனம் இயக்கம்

மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வனத்துறை வாகனம் இயக்கம்

மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வனத்துறை வாகனம் இயக்கம்


UPDATED : ஜன 21, 2024 12:00 AM

ADDED : ஜன 21, 2024 09:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2024 12:00 AM ADDED : ஜன 21, 2024 09:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கூடலுார்:
கூடலுார் கோடமூலா கிராம பழங்குடி மாணவர்கள், முதுமலை கார்குடி அரசு பள்ளிக்கு சென்று வர வனத்துறை மூலம் வாகன இயக்கம் துவங்கியது.கூடலுார் தொரப்பள்ளி அருகே உள்ள, கோடமுலா பழங்குடி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள், முதுமலை கார்குடி அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, தொரப்பள்ளி அரசு உண்டு உறைவிட நடுநிலை பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில், கடந்த, 12ம் தேதி காலை 8:00 மணிக்கு மாணவர்கள், பள்ளி செல்வதற்காக கோடமுலா சாலை வழியாக மைசூரு தேசிய நெடுஞ்சாலை நோக்கி நடந்து வரும் போது, காட்டு யானை விரட்டியது. மாணவர்கள் அலறி அடித்து ஓடி உயிர் தப்பினர். அதில், பிளஸ்-1, படிக்கும் மாணவி காளி, 6ம் வகுப்பு படிக்கும் மாணவர் பொம்மன் ஆகியோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.தொடர்ந்து, பெற்றோர், மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதில், &'யானையை அப்பகுதியில் விரட்ட வேண்டும்; மாணவர்களை வனத்துறை வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்று வர வேண்டும்; கிராமத்தை சுற்றி அகழி மற்றும் மின்வேலி அமைக்க வேண்டும்,&' என, வலியுறுத்தி, மாக்கமூலாவில் உள்ள, டி.எப்.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.அதன்படி, முதுமலை கார்குடி அரசு உண்டு உறைவிட பள்ளியில் படிக்கும், கோடமூலா பழங்குடி கிராமத்தைசேர்ந்த, 47 மாணவ, மாணவிகளை, வனத்துறையினர் வாகனங்கள் மூலம் பள்ளிக்கு அழைத்து சென்று வரும் பணியை நேற்று, முதல் துவங்கி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us