விநாயகா மிஷன் பல்கலை ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது
விநாயகா மிஷன் பல்கலை ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது
UPDATED : ஜன 22, 2024 12:00 AM
ADDED : ஜன 22, 2024 09:58 AM
புதுச்சேரி:
விநாயகா மிஷன் பல்கலைக்கழக அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு இந்தியாவில் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்விக்கான சிறந்த பங்களிப்பு விருது வழங்கப்பட்டது.விநாயகா மிஷன் பல்கலைக்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை, புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக்கல்லுாரி மற்றும் சென்னை ஆறுபடை தொழில்நுட்ப கல்லுாரி வளாகங்களில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு இந்தியாவின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை கல்விக்கான சிறந்த பங்களிப்பினை வழங்கும் நிறுவனம் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.ஆராய்ச்சி மற்றும் கல்வி போன்ற பல துறைகளில் நுண்ணறிவு சார்ந்த விவரங்களை பகுப்பாய்வு செய்யும் குளோபல் ட்ரையம்ப் அறக்கட்டளை ஆண்டுதோறும் கல்வியலுக்கு சிறந்த பங்களிப்பாற்றும் நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களையும் அடையாளப்படுத்தி விருது வழங்கி அங்கீகரித்து வருகிறது.அதனடிப்படையில் இந்தாண்டிற்கான விருது வழங்கும் விழா பெங்களூருவில் நடந்தது. விழாவில் கவுரவ விருந்தினராக பங்கேற்ற துறையின் டீன் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். மேலும் கல்வி நிறுவனங்களை சேர்ந்த கல்வியாளர்கள், வல்லுனர்கள் என பலர் பங்கேற்றனர்.இதில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை இந்தியாவில் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்விக்கு சிறந்த பங்களிப்பினை வழங்கும் நிறுவனம் என்ற விருதை கேன்டிலா மருந்தியல் நிறுவனத்தின் முன்னாள் மூத்த துணைத் தலைவர் ராஜ்புட் மற்றும் விஞ்ஞானி பிரபாகரன் ஆகியோர் வழங்கினர். விருதினை துறை டீன் பெற்றுக் கொண்டார்.விருது பெற்ற டீன் செந்தில்குமாரை, பல்கலை வேந்தர் கணேசன், துணைத் தலைவர் அனுராதா கணேசன் ஆகியோர் வாழ்த்தினர்.