சாலை வரை சிதறி கிடந்த நீட் தேர்வுக்காக வாங்கப்பட்ட கையெழுத்து அட்டைகள்
சாலை வரை சிதறி கிடந்த நீட் தேர்வுக்காக வாங்கப்பட்ட கையெழுத்து அட்டைகள்
UPDATED : ஜன 22, 2024 12:00 AM
ADDED : ஜன 22, 2024 10:06 AM
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன் பாளையத்தில், திமுக இளைஞரணி மாநில மாநாடு நடந்தது. இந்த மாநாட்டு முகப்பு பகுதியில் தமிழக முழுவதும் நீட் தேர்வு ஒழிப்புக்காக திமுகவினரால், தமிழகம் முழுவதும் இளைஞர் அணி சார்பில் வாங்கப்பட்ட 50 லட்சம் கையெழுத்து அட்டைகள், கையெழுத்துப் போட்ட நபர்களுடைய பெயர் மொபைல் எண் மற்றும் குடியரசு தலைவர் முகவரியுடன் கையெழுத்து அட்டைகள் கண்ணாடி கூண்டில் வைக்கப்பட்டிருந்தது. இந்த கையெழுத்து அட்டைகளை, முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.குடியரசு தலைவரிடம், இந்த அட்டைகளை விரைவில் ஒப்படைப்பதாக அமைச்சர் உதயநிதி இன்று நடந்த மாநாட்டில் கூறினார். மாநாடு முடிந்த சில மணி நேரத்தில் கண்ணாடி கூண்டில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான கையெழுத்து அட்டைகள் மாநாடு வழி பாதை மற்றும் சுற்றுவட்டாரம் சாலை என 200 மீட்டர் தூரத்திற்கு சிதறி கிடந்ததுடன், ஆங்காங்கே குவியல், குவியிலாக கிடந்தது. பல அட்டைகள் கிழிந்த நிலையிலும் காணப்பட்டது. இதை பார்த்த திமுகவினர் நீட் தேர்வு ஒழிப்புக்காக கையெழுத்து பெறப்பட்ட கையெழுத்து அட்டைகள் பாதுகாப்பாக வைக்காமல் இப்படி சாலையில் வீசி சென்று விட்டனர் என புலம்பியபடி சென்றனர்.நீட் தேர்வு ஒழிப்புக்கான திமுகவினர் வாங்கிய கையெழுத்துக்கள் கொண்ட அட்டைகள் சிதறி கிடந்த சம்பவம் மாநாடு நடந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.