UPDATED : ஜன 22, 2024 12:00 AM
ADDED : ஜன 22, 2024 05:06 PM
சென்னை:
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., விளையாட்டு மைதானத்தில், கடந்த 3ம் தேதி, 47வது சென்னை புத்தகக் காட்சி துவங்கியது.நேற்று வரை 19 நாட்கள் நடந்த இந்த புத்தகக் காட்சியை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான பபாசி நடத்தியது. இதற்கு, 15 லட்சம் வாசகர்கள் வந்த நிலையில், 18 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்று சாதனை படைத்துள்ளது.புத்தகக் காட்சி நடக்க உதவிய கொடையாளர்கள், நிறுவனங்களைச் சேர்ந்தோரை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கவுரவித்தார்.அவர்களுடன், பதிப்பு பணியில் நுாறாண்டுகள் நிறைவு செய்த கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், பதிப்புப் பணியில் நுாறாண்டுகள் நிறைவு செய்த பதிப்பாளர் எம்.ஆர். எம். அப்துற்றஹீம், பதிப்புப் பணியில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த மணிமேகலைப் பிரசுரம், மணிவாசகர் பதிப்பகம், மீனாட்சி புத்தக நிலையம்.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரி நிலையம், பழனியப்பா பிரதர்ஸ், பூங்கொடி பதிப்பகம், ராஜ்மோகன் பதிப்பகம், சர்வோதய இலக்கியப் பண்ணை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் ஆகியற்றையும் பாராட்டி கவுரவித்தார்.அதேபோல், பதிப்புப் பணியில் 25 ஆண்டுகள் நிறைவு செய்த, 25 பதிப்பகங்களையும் கவுரவித்தார்.