sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்வதேச கடிதம் எழுதும் போட்டி விண்ணப்பிக்க தபால் துறை அழைப்பு

சர்வதேச கடிதம் எழுதும் போட்டி விண்ணப்பிக்க தபால் துறை அழைப்பு

சர்வதேச கடிதம் எழுதும் போட்டி விண்ணப்பிக்க தபால் துறை அழைப்பு


UPDATED : ஜன 24, 2024 12:00 AM

ADDED : ஜன 24, 2024 04:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2024 12:00 AM ADDED : ஜன 24, 2024 04:59 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
 9 முதல் 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான சர்வதேச கடிதம் எழுதும் போட்டியில் பங்குபெற விண்ணப்பிக்கலாம் என தபால் துறை அழைப்பு அழைப்பு விடுத்துள்ளது.ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகர பாபு விடுத்துள்ள அறிக்கை:
தபால் துறை சார்பில் உலகளாவிய அஞ்சல் அமைப்பு மூலம், சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடக்கவுள்ளது. 9 முதல் 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, -மாணவிகள் பங்கேற்கலாம். 150 வயதில் உலகளாவிய தபால் தொழிற்சங்கம், 8 தலைமுறைக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சேவை செய்து வருகிறது. எதிர்கால தலைமுறையினருக்கு அவர்கள் மரபுரிமையாக இருக்கும் என்று நீங்கள் நம்பும் உலகத்தை பற்றி விளக்கி ஒரு கடிதம் எழுத வேண்டும். கடிதம், 800 வார்த்தைக்குள் இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மொழியில் கடிதம் எழுதலாம்.சர்க்கிள் அளவில் முதல் இடம் பெறுபவர்களுக்கு, ரூ.25 ஆயிரம், 2ம் இடத்துக்கு, ரூ.10 ஆயிரமும், 3ம் இடத்துக்கு, ரூ.5,000 ரூபாய், சான்றிதழ் வழங்கப்படும். தேசிய அளவிலான போட்டியில் முதல் 3 பரிசு பெறுவோருக்கு முறையே, ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும். தேசிய அளவில் சிறந்த கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச போட்டிக்கு ஏற்கப்படும்.கடித போட்டி பள்ளி அளவில் வரும், 31க்குள் நடத்தி, அதில் சிறந்த கடிதங்களை விண்ணப்பத்துடன், ஒரு போட்டோ, பிறந்த தேதி அல்லது ஆதார் அட்டை நகல் அல்லது பள்ளியில் வழங்கிய பிறந்த தேதிக்கான சான்றுடன், தபால் கண்காணிப்பாளர் (எஸ்பிஓ), - ஈரோடு கோட்டம், ஈரோடு - 638001 என்ற முகவரிக்கு பிப்.,5க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். போட்டி நடக்கும் இடம், தேதி துறை சார்பில் பின்னர் அறிவிக்கப்படும். விவரங்களுக்கு இந்திய தபால் துறையின் www.indiapost.gov.in தளத்திலோ அல்லது ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தினை 0424-2258066 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us