தமிழ் வளர்ச்சி துறை சார்பில் வரும் 30ல் பேச்சு போட்டி
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் வரும் 30ல் பேச்சு போட்டி
UPDATED : ஜன 25, 2024 12:00 AM
ADDED : ஜன 25, 2024 09:53 AM
செங்கல்பட்டு:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, வரும் 30ம் தேதி பேச்சுப்போட்டி நடத்தப்படும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து, கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டத்தில், மறைமலையடிகள், கோதைநாயகி மற்றும் எழுத்தாளர் ஞாநி இவர்களின் நினைவைப்போற்றும் வகையில், எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லுாரி அரங்கில், வரும் பிப்., 1ம் தேதி கருத்தரங்கம் நடக்கிறது.முன்னதாக, மறைமலையடிகள், கோதைநாயகி மற்றும் எழுத்தாளர் ஞாநி ஆகியோரின் இலக்கியப்பணி, தமிழ் தொண்டு, தமிழ்மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுக்கூரும் வகையில், செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரியில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, வரும் 30ம் தேதி காலை 10:00 மணிக்கு, பேச்சுப்போட்டி நடக்கிறது.இதில், பள்ளி மாணவர்கள் தலைமையாசிரியர் மற்றும் கல்லுாரி மாணவர்கள், கல்லுாரி முதல்வர் ஆகியோரின் பரிந்துரையுடன் போட்டியில் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.