sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கம்ப ராமாயணத்தை ஹிந்தியில் மொழிபெயர்க்க பிரதமர் உத்தரவு

கம்ப ராமாயணத்தை ஹிந்தியில் மொழிபெயர்க்க பிரதமர் உத்தரவு

கம்ப ராமாயணத்தை ஹிந்தியில் மொழிபெயர்க்க பிரதமர் உத்தரவு


UPDATED : ஜன 26, 2024 12:00 AM

ADDED : ஜன 26, 2024 12:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2024 12:00 AM ADDED : ஜன 26, 2024 12:06 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கம்பராமாயணத்தை ஹிந்தியில் மொழிபெயர்க்கும்படி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார் என பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் தெரிவித்தார்.டாக்டர் பிரியா ராமச்சந்திரன் எழுதிய &'கம்பனில் மர்மக்கோடுகள்&' என்ற நுாலை, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் தெ.ஞானசுந்தரம் வெளியிட, ஆன்மிக பேச்சாளர் இலங்கை ஜெயராஜ் பெற்றுக்கொண்டார்.நுாலை வெளியிட்டு தெ.ஞானசுந்தரம் பேசியதாவது:
நுாலாசிரியர் பிரியா ராமச்சந்திரன் சிறந்த டாக்டர், பேச்சாளர், ஆய்வாளர், பாடகர், நுாலாசிரியர் எனும் பன்முகம் கொண்டவர். இவர், பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் வந்தபோது, கம்பராமாயணத்தின் சில பாடல்களை தேர்வு செய்து குருசரணை பாட வைத்தார். எங்களை விளக்கம் சொல்ல வைத்தார். அதைக்கேட்டு பிரமித்த பிரதமர், டில்லி சென்றதும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை தொடர்புகொண்டு, கம்பராமாயணத்தின் ஹிந்தி பதிப்பை கேட்டுள்ளார். அது இல்லை என்றதும் உடனடியாக ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், மொழிபெயர்க்கும்படி உத்தரவிட்டுள்ளார். அதற்கு காரணம் டாக்டர் பிரியா ராமச்சந்திரன்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, இலங்கை ஜெயராஜ் தலைமையில், டாக்டர்கள் பிரியாராமச்சந்திரன் மற்றும் முகமது ரீலா பங்கேற்ற ராவணன் வீழ்ச்சிக்கு காரணமானவர் பட்டியலில் சூர்ப்பனகையை முதலிடத்தில் இருத்துவது முறை அல்ல என்ற தலைப்பில், வழக்காடு மன்றம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us