sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை பூரணத்திற்கு முதல்வர் சிறப்பு விருது

மதுரை பூரணத்திற்கு முதல்வர் சிறப்பு விருது

மதுரை பூரணத்திற்கு முதல்வர் சிறப்பு விருது


UPDATED : ஜன 27, 2024 12:00 AM

ADDED : ஜன 27, 2024 03:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2024 12:00 AM ADDED : ஜன 27, 2024 03:27 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பள்ளிக்கு நிலம் வழங்கிய, ஆயி அம்மாளுக்கு, முதல்வர் சிறப்பு விருது வழங்கப்பட்டது.மதுரை யா.கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆயி அம்மாள் என்கிற பூரணம். மதுரை தல்லாக்குளம் கிளை கனரா வங்கியில், எழுத்தராக பணிபுரிகிறார். இவர் தான் படித்த, யா.கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கட்டடங்கள் கட்டுவதற்காக, தன் மகள் ஜனனி நினைவாக, 1.52 ஏக்கர் நிலத்தை வழங்கி உள்ளார்.தன் சொத்துக்களை, கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி உதவி செய்து வருகிறார். அவரது தன்னலமற்ற கொடை உள்ளத்தை பாராட்டி, நேற்று குடியரசு தின விழாவில், முதல்வர் ஸ்டாலின், முதல்வரின் சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார்.விருது குறித்து ஆயி அம்மாள் கூறுகையில், முதல்வரிடம் விருது பெற்ற நேரத்தில், நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே கிடையாது. நன்றி சொல்ல வார்த்தை வரவில்லை. ஆனந்த கண்ணீர் தான் வந்தது. கல்வி வளர்ச்சிக்காக, என் மகள் எண்ணம் நிறைவேறுவதற்காக, நான் நிலம் அளித்த செய்தி, உலக அளவில் பேசப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us