sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு புத்தகம் எழுத நேரடி பயிலரங்கம்

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு புத்தகம் எழுத நேரடி பயிலரங்கம்

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு புத்தகம் எழுத நேரடி பயிலரங்கம்


UPDATED : ஜன 28, 2024 12:00 AM

ADDED : ஜன 28, 2024 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2024 12:00 AM ADDED : ஜன 28, 2024 10:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
புத்தக வாசிப்பை ஊக்குவிக்கவும், மாணவர்களின் படைப்புத்திறனை வெளிக்கொணர்ந்து சிறந்த இளம் எழுத்தாளர்களாக உருவாக்கும் நோக்கில், எழுதுக புத்தகம் இயக்கம் சார்பில், புத்தகம் எழுத பயிற்றுவிக்கும் ஒரு நாள் நேரடி பயிலரங்கம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் உதவி கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் பயிலரங்கை துவக்கி வைத்தார். பொது நுாலக இயக்கக துணை இயக்குனர் இளங்கோ சந்திரகுமார் முன்னிலை வகித்தார்.இதில், எழுத்தாளர்கள் முனைவர் கார்த்திகேயன், எழுத்தாளர் நீதிமணி, கவிஞர் கவிப்பித்தன், பாலாறு பதிப்பகம் பதிப்பாளர் சரவணபாரதி, எழுத்தாளர் நாராயணீ கண்ணன் ஆகியோர் மாணவ-மாணவியருக்கு புத்தகம் எழுத பயிற்சி வழங்கினர்.இதில், காஞ்சிபுரம், சென்னை, கிருஷ்ணகிரி,சேலம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், செங்கல்பட்டு, அரியலுார் ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 200 மாணவ - மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.நிகழ்ச்சி ஏற்பாட்டை எழுதுக புத்தகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சுகுமாறன், பூங்குழலி, பாலச்சந்தர், கிள்ளிவளவன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us