புத்தகங்கள் வழியாகத்தான் நமது பண்பாடு, கலாசாரம் வெளிவரும்
புத்தகங்கள் வழியாகத்தான் நமது பண்பாடு, கலாசாரம் வெளிவரும்
UPDATED : ஜன 28, 2024 12:00 AM
ADDED : ஜன 28, 2024 10:57 AM
கோவை:
கோவை நன்னெறிக் கழகம் சார்பில், 67ம் ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா, ரேஸ்கோர்ஸ் காஸ்மோபாலிட்டன் கிளப் அரங்கில் நடந்தது.விழாவுக்கு, தொழில் அதிபர் இயகோகா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், விஜயா பதிப்பகம் வேலாயுதத்துக்கு நுால் நெறிச்செம்மல் விருதும், கவிஞர் சிதம்பரநாதனுக்கு தமிழ் நெறிச்செம்மல் விருதும் வழங்கப்பட்டது.விருது பெற்ற விஜயா பதிப்பகம் வேலாயுதம் பேசுகையில், தமிழகம் முழுவதும் நடக்கும் புத்தக கண்காட்சிகளை, லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடுகின்றனர். வாசகர்கள் மத்தியில் வாசிப்பு ரசனையும், அது குறித்த விழிப்புணர்வையும்உருவாக்க வேண்டும். புத்தகங்கள் வழியாகத்தான் நமது பண்பாடு, கலாசாரம், இலக்கியம் மற்றும் வாழ்வியல் சார்ந்த விஷயங்களை, மக்களுக்கு தெரிவிக்க முடியும், என்றார்.எழுத்தாளர் நாஞ்சில்நாடன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நன்னெறிக் கழக நிர்வாகிகள் நடராஜன், பத்மநாபன், ஜெயசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.