UPDATED : ஜன 28, 2024 12:00 AM
ADDED : ஜன 28, 2024 11:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை துணைத்தலைவர் டாக்டர் நாச்சியாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. கண் மருத்துவத்தில் அவரது, 55 ஆண்டுகால சேவையை பாராட்டி மத்திய அரசு இவ்விருதை வழங்கியுள்ளது.அரவிந்த் கண் மருத்துவமனையை நிறுவிய இவரது சகோதரர் டாக்டர் வெங்கடசாமியும், இம்மருத்துவமனையின் தற்போதைய கவுரவ தலைவரான இவரது கணவர் டாக்டர் நம்பெருமாள்சாமியும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள்.அந்த வகையில் அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்த மூவர் இவ்விருது பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.