sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முயன்றால் முடியாதது இல்லை மரம் வளர்த்து வளம் சேர்க்கும் இளைஞர்கள்

முயன்றால் முடியாதது இல்லை மரம் வளர்த்து வளம் சேர்க்கும் இளைஞர்கள்

முயன்றால் முடியாதது இல்லை மரம் வளர்த்து வளம் சேர்க்கும் இளைஞர்கள்


UPDATED : ஜன 29, 2024 12:00 AM

ADDED : ஜன 29, 2024 09:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 29, 2024 12:00 AM ADDED : ஜன 29, 2024 09:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சாத்துார்:
சாத்துார் அண்ணாநகரில் முயன்றால் முடியாதது இல்லை என்ற உறுதியுடன் மரம் வளர்த்து இளைஞர்கள் வளம் சேர்த்து வருகின்றனர்.சாத்துார் அண்ணா நகரில் ரோடு விரிவாக்க பணி, குடிநீர் திட்ட, பாதாள சாக்கடை விரிவாக்க பணிகளால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.அண்ணா நகர் பகுதி முழுவதும் மரங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன அப்போது இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று கூடி மரம் வளர்ப்பதில் ஈடுபட்டனர். இளைஞர்களின் முயற்சியால் அண்ணா நகரில் தற்போது வரிசையாக மரங்கள் வளர்ந்து வருகின்றன. கோடைகாலத்திலும் குளுகுளுவென இந்தப் பகுதி காணப்படுகிறது.தற்போது இந்த பகுதியில் இளைஞர்கள் அழகுக்காக குறோட்டன்ஸ், அரளிச் செடிகளை நட்டி பராமரித்து வளர்த்து வருகின்றனர். மரக்கன்றுகளாக இருந்த போது காலை மற்றும் மாலை நேரங்களில் சைக்கிளில் குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி பராமரித்து மரக்கன்றுகளை வளர்த்தனர். இதன் காரணமாக தற்போது மரங்கள் பசும் சோலையாக வளர்ந்துள்ளன.மரம் வளர்ப்பதிற்கு அரசாங்கத்தை நம்பி இருக்காமல் இளைஞர்கள் தாங்களாக ஒன்று கூடி முயன்றால் முடியாதது ஏதுமில்லை என்ற சங்கல் பத்தோடு மரக்கன்றுகளை விலைக்கு வாங்கியும் இலவசமாக பெற்றும் நட்டி பராமரித்து வளர்த்ததன் மூலம் தற்போது சுத்தமான காற்று வீசுகிறது.ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள் இதுபோன்று மரம் வளர்ப்பதில் ஈடுபட்டால் ஒவ்வொரு ஊரும் மாசில்லா நகராக உருவாகும் என்பதில் ஐயமில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us