UPDATED : ஜன 29, 2024 12:00 AM
ADDED : ஜன 30, 2024 07:13 AM
இந்தியாவின் முதல் ஆங்கில மொழி செய்தித்தாள் வெளியிடப்பட்ட வரலாற்றில் இந்த நாள் - ஜனவரி 29. ஜனநாயகத்தின் நான்காவது துாண் பத்திரிகை.உண்மை தகவல்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிப்பதில் செய்தித்தாள் முக்கிய பங்கு வகிக்கிறது.மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள நாளிதழ் படிப்பது அவசியம்.29 ஜனவரி 1780: 29 ஜனவரி 1780 அன்று, இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் அச்சிடப்பட்ட செய்தித்தாள் ஹிக்கிஸ் பெங்கால் கெசட் கோல்கட்டாவில் அதன் வெளியீட்டைத் தொடங்கியது. அது ஜேம்ஸ் அகஸ்டஸ்ஹிக்கி என்ற ஒரு ஐரிஷ்காரரால் தொடங்கப்பட்ட வாராந்திர ஆங்கில நாளிதழ். இந்த கட்டுரை ஆசிரியர் மற்றும் செய்தித்தாள் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான துணுக்குகளைப் பகிர்ந்து கொள்கிறது. இதை நினைவுப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜன.29ல் தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.