UPDATED : ஜன 30, 2024 12:00 AM
ADDED : ஜன 30, 2024 09:53 AM
வானுார்:
விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வானுார் ஒன்றிய கிளை சார்பில், வான் நோக்கு நிகழ்வு நடந்தது.தேற்குணம் ஆர்.சி., துவக்கப்பள்ளி வளாகத்தில், அறிவியல் மக்களுக்கே, அறிவியல் சுய சார்பிற்கே, அறிவியல் சமூக மாற்றத்திற்கே என்ற முழக்கத்தின் அடிப்படையில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் இளங்கோவன் வரவேற்றார்.மாவட்ட பொருளாளர் சுகதேவ், தேற்குணம் ஊராட்சி தலைவர் வினோதினி குமார், பாதிரியார் தாஸ், அறிவியல் இயக்க முன்னாள் ஒன்றிய செயலாளர் நாகராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வானவியல் கருத்தாளர் அருள், வான்நோக்கு நிகழ்வு குறித்தும், நிலவு, வியாழன் உள்ளிட்ட கோள்கள் மற்றும் நட்சத்திர தொகுதிகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.நிகழ்ச்சியில் அறிவியல் இயக்க உறுப்பினர் சங்கீதா, இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள் எலிசபெத், ராணி மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.