UPDATED : ஜன 30, 2024 12:00 AM
ADDED : ஜன 31, 2024 10:07 AM
உதவித்தொகை விபரம்:
ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் 3 ஆண்டு வரையிலான டிப்ளமா மற்றும் 4 ஆண்டு வரையிலான இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. டிப்ளமா அளவில் ஆயிரம் பேர், பட்டப்படிப்பு அளவில் ஆயிரம் பேர் என மொத்தம் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு செய்ய்யப்படுகின்றனர். கல்விக் கட்டணம் மற்றும் கம்ப்யூட்டர், புத்தகம், சாப்ட்வேர், இதர கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கான செலவினங்கள் இந்த உதவித்தொகை திட்டத்தில் அடங்கும்.தகுதிகள்:
பெற்றோர் இல்லாத மாணவ, மாணவிகள் அல்லது கோவிட் -19 பெருந்தொற்றால் தாய் அல்லது தந்தையரை அல்லது பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள் இந்த உதவித்தொகை பெற தகுதி உண்டு. இட ஒதுக்கீடு:
இந்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறையின்படி, உதவித்தொகை வழங்கப்படுகிறது.விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜனவரி 31விபரங்களுக்கு:
https://scholarships.gov.in/