sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிந்தனைகளை சிதற விடாதீங்க! கல்லுாரி மாணவர்களுக்கு அறிவுரை

சிந்தனைகளை சிதற விடாதீங்க! கல்லுாரி மாணவர்களுக்கு அறிவுரை

சிந்தனைகளை சிதற விடாதீங்க! கல்லுாரி மாணவர்களுக்கு அறிவுரை


UPDATED : பிப் 01, 2024 12:00 AM

ADDED : பிப் 01, 2024 09:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 01, 2024 12:00 AM ADDED : பிப் 01, 2024 09:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வால்பாறை:
படிக்கும் வயதில், தேவையற்ற சிந்தனைகளுக்கு மனதில் இடம் தரக்கூடாது, என்று பட்டமளிப்பு விழாவில் கல்லுாரி இணை இயக்குனர் கீதா தெரிவித்தார்.வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 14வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் வரவேற்றார். விழாவில், 260 மாணவ, மாணவியருக்கு, கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கீதா பட்டங்களை வழங்கி பேசியதாவது: 
கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள், தங்களின் குடும்ப சூழ்நிலைகளை உணர்ந்து நன்கு படிக்க வேண்டும். படிக்கும் வயதில் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகக்கூடாது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற சிந்தனைகளுக்கு மனதில் இடம் தரக்கூடாது. கல்வியால் மட்டுமே, வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்து, படிக்க வேண்டும்.உழைப்பால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். உங்களது பெற்றோர் படும் கஷ்டத்தை உணர்ந்து, மாணவர்கள் திறம்பட படித்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணை இயக்குனர் கலைசெல்வி, கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us