UPDATED : பிப் 02, 2024 12:00 AM
ADDED : பிப் 02, 2024 10:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
நடப்பு கல்வி ஆண்டு கல்வி திட்டத்துக்கு பள்ளிக்கல்வி துறை ரூ.100 கோடி ஒதுக்கி உள்ளது.தமிழகத்தில், கொரோனா கால ஊரடங்கால், மாணவர்கள் கற்றலில் பின்தங்கினர். நிலையை சமாளிக்க, மாணவர்களின் வீடுகளுக்கு அருகே, பொது இடத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தும், இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகமானது. இந்த திட்டம், இந்த ஆண்டுடன் நிறைவு பெறும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டு செலவுக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கி, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.