திறன் இந்தியா திட்டத்தில் 1.4 கோடி பேருக்கு பயிற்சி
திறன் இந்தியா திட்டத்தில் 1.4 கோடி பேருக்கு பயிற்சி
UPDATED : பிப் 02, 2024 12:00 AM
ADDED : பிப் 02, 2024 10:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசு, 20க்கும் மேற்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இணைந்து, திறன் இந்தியா திட்டத்தில், நாடு முழுதும் உள்ள இளையோருக்கு, பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், குறுகிய, நீண்ட கால அளவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இத்திட்டத்தின் கீழ் 1.40 கோடி இளையோருக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் அறிவுத் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் இருப்பதாகவும்; ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, நிர்வாகம், வளர்ச்சி மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.