காரைக்குடியில் சட்ட கல்லுாரிக்கு நாளை அடிக்கல் நாட்டு விழா
காரைக்குடியில் சட்ட கல்லுாரிக்கு நாளை அடிக்கல் நாட்டு விழா
UPDATED : பிப் 02, 2024 12:00 AM
ADDED : பிப் 02, 2024 05:05 PM
காரைக்குடி:
காரைக்குடியில், ரூ.101 கோடியில் அரசு சட்டக் கல்லுாரி புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறுகிறது.காரைக்குடியில் புதிய சட்டக் கல்லுாரி கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது.சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கல்லுாரியை திறந்து வைத்தார். அழகப்பா இன்ஜி., கல்லுாரியில் உள்ள கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. சட்டக் கல்லுாரிக்கான புதிய கட்டடம் கட்டுவதற்கு திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் இடம் தேர்வு செய்யும் பணி பல மாதங்களாக நடந்து வந்தது.தற்போது திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலை கழனிவாசல் அருகே 19.16 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டடத்திற்கு ரூ.101 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.நாளை புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், கார்த்தி எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.