UPDATED : பிப் 03, 2024 12:00 AM
ADDED : பிப் 03, 2024 09:37 AM
மேட்டுப்பாளையம்:
அம்பாள் பள்ளிகளில் படிக்கும், பொதுத் தேர்வு எழுதும், மாணவ, மாணவியர், பெற்றோருக்கு பாத பூஜை செய்தனர்.சிறுமுகையில் அம்பாள் பள்ளியில் படிக்கும் பொது தேர்வு எழுதும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருக்கு பாதபூஜை செய்யும் நிகழ்வு நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் கீதா பழனிசாமி அனைவரையும் வரவேற்றார்.பொள்ளாச்சி மங்கையர்க்கரசியார் அறநெறி அறக்கட்டளையை சேர்ந்த, தலைமை ஆசிரியர் குமாரசாமி, பொறுப்பாசிரியர் மணிகண்டன், அறநெறி ஆசிரியர்கள் லட்சுமணன், மோகன்ராஜ், மோகன், தனபாக்கியம், ஆனந்தி ஆகியோர் பாதபூஜை வழிபாட்டை நடத்தினர்.முன்னதாக மேடையில் அன்னபூரணி தாயாருடன், உடனமர் சோற்றுதுரை நாதர் சுவாமிக்கு அலங்காரம் செய்து வைத்து, சிறப்பு பூஜைகள் செய்தனர். நிகழ்ச்சியில் பெற்றோருக்கு, மாணவ, மாணவியர் பாத பூஜை செய்தனர். முடிவில் தங்கள் குழந்தைகளின் தலை மீது, பெற்றோர் மலர் தூவி, கை வைத்து ஆசீர்வாதம் செய்தனர்.இந்த நிகழ்வில், 500க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் திருமூர்த்தி, துணை முதல்வர்கள் தனலட்சுமி, உமா மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

