UPDATED : பிப் 04, 2024 12:00 AM
ADDED : பிப் 04, 2024 09:10 AM
திருப்பூர்:
நிப்ட்-டீ கல்லுாரியில் நடைபெற்ற போட்டிகளில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரியில், பள்ளி மாணவர்களுக்கான திறன் கண்டறியும் போட்டி நேற்று நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் துவக்கிவைத்தார். அவிநாசி, இடுவம்பாளையம், கணக்கம்பாளையம், மங்கலம், கணபதிபாளையம், பல்லடம் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச்சேர்ந்த மாணவ, மாணவியர் 1,500 பேர் பங்கற்றனர்.தனி நடனம், குழு நடனம், இசை பாடல், முக ஓவியம் தீட்டுதல், வினாவிடை, நெருப்பில்லாத சமையல், கழிவு பொருட்களை பயன்படுத்தி கைவினை பொருட்கள் தயாரித்தல், நாடகம், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன.நிப்ட்-டீ கல்லுாரி மாணவியர், புதுமையான ஆயத்த ஆடைகளை அணிந்துவந்து, பேஷன் ஷோ நடத்தினர். திறன் கண்டறியும் போட்டியில், கிட்ஸ் கிளப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது. ஜெயந்தி மெட்ரிக் பள்ளிக்கு ரன்னர் கோப்பை வழங்கப்பட்டது.