UPDATED : பிப் 04, 2024 12:00 AM
ADDED : பிப் 04, 2024 10:09 AM
திருப்பூர்:
இலக்கியமும், தமிழும் படித்தவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் உயர்வானவர்களாக உள்ளனர். மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.எண்ணங்கள் சரியாகவும், நிறைவாகவும் இருந்ததால், எல்லாம் சரியாக இருக்கும்&'&' என்று இளையோர் இலக்கியப் பயிற்சி மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் நெல்லை ஜெயந்தா பேசினார்.தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், இளையோர் இலக்கியப் பயிற்சி, சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் வரவேற்றார். திருப்பூர் தமிழ்ச் சங்க தலைவர் முருகநாதன் முன்னிலை வகித்தார்.இளையோர் இலக்கியப் பயிற்சி மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் நெல்லை ஜெயந்தா பேசுகையில், தமிழ் மொழி தரும் வளர்ச்சியை யாராலும் தர முடியாது. பொறியியல் படிப்புக்கு கிடைக்காத கவுரவம், தமிழுக்கு கிடைக்கிறது என்றால், அதில் பொதிந்துகிடக்கும் அர்த்தங்கள் தான். இலக்கியமும், தமிழும் படித்தவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் உயர்வானவர்களாக உள்ளனர்.நாளைய தலைமுறையான உங்களின் மனம் தான் உங்களை ஒழுங்குபடுத்தும், வாழ்வை தீர்மானிக்கும். மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். எண்ணங்கள் சரியாகவும், நிறைவாகவும் இருந்ததால், எல்லாம் சரியாக இருக்கும் என்றார்.தொடர்ந்து, செம்மொழித் தமிழின் சிறப்பு எனும் தலைப்பில், கோடை எம்.எப்., முன்னாள் இயக்குனர் சுந்தர ஆவுடையப்பன், மரபுக் கவிதைகளின் சிறப்பும் சிந்தனையும் எனும் தலைப்பில், மரபின் மைந்தன் முத்தையா, புதுக்கவிதையின் தோற்றமும், ஏற்றமும் எனும் தலைப்பில், ஆண்டாள் பிரியதர்ஷினி, கண்களை திறந்து கதை உலகம் எனும் தலைப்பில் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும் எனும் தலைப்பில், கோவை, பாரதியார் பல்கலை தமிழ்த்துறை தலைவர் சித்ரா ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.