தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாக மாணவர்களிடம் மோசடி: மூவர் கைது

தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாக மாணவர்களிடம் மோசடி: மூவர் கைது

தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாக மாணவர்களிடம் மோசடி: மூவர் கைது


UPDATED : பிப் 04, 2024 12:00 AM

ADDED : பிப் 05, 2024 08:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 04, 2024 12:00 AM ADDED : பிப் 05, 2024 08:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மறைமலை நகர்:
மறைமலை நகர் அடுத்த பொத்தேரி பகுதியில், பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மருத்துவ மாணவர்களை தொடர்பு கொள்ளும் மர்ம கும்பல், தேர்வில் தேர்ச்சி பெற செய்வதாக கூறி பணம் பறித்து வந்த தகவல், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியவந்தது.இது குறித்து, பல்கலைக்கழக நிர்வாகிகள், மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், இதில் தொடர்புடைய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிங்ஸ்லி, 31, அவரின் தம்பி எழிலரசு, 30. கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயபிரகாஷ், 27, ஆகிய மூவரை கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய சோதனையில், அவர்களிடமிருந்து 13.30 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின், மூவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us