UPDATED : பிப் 05, 2024 12:00 AM
ADDED : பிப் 05, 2024 09:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
அரசு பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வில், 40,000 பட்டதாரிகள்பங்கேற்றனர்.தமிழக அரசு பள்ளிகளில், பட்டதாரிஆசிரியர் பணியில் 2,582 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில் நேற்று போட்டி தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம்முழுதும், 130 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தேர்வில் பங்கேற்க, 41,485 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.நேற்றைய தேர்வுக்கு, 1,351 பேர் ஆப்சென்ட் ஆகினர்; 97 சதவீதம் பேர் ஆஜராகினர். இந்த தேர்வுக்கான முடிவுகள், ஏப்., 30க்குள் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொண்டு, இறுதி பட்டியலை, மே 31க்குள் வெளியிட பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

