UPDATED : பிப் 05, 2024 12:00 AM
ADDED : பிப் 05, 2024 09:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள், மார்ச்சில் நடக்க உள்ளன. இதற்கான பணிகளை, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது.பொதுத் தேர்வில் எந்த குளறுபடிகளும், முறைகேடுகளும் நடக்காமல் தடுக்க, 3 ஐ.ஏ. எஸ்., அதிகாரிகள், பள்ளிக்கல்வி, தொடக்க கல்வி, தனியார் பள்ளிகளின் இயக்குனர்கள் உள்ளிட்ட, 38 பேரை, மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளாக, பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் நியமித்து உள்ளார்.இதற்கிடையில், பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டம், சென்னையில் நாளை நடக்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கூட்டம், இதே நாளில், திருச்சி மாவட்டம், சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

