UPDATED : பிப் 05, 2024 12:00 AM
ADDED : பிப் 05, 2024 09:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டக் கிளை செயற்குழு கூட்டம் தலைவர் முருகேசன்தலைமையில் நடந்தது.உசிலம்பட்டி கல்வி மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் வரவேற்றார். பொருளாளர் ஹெலன் தெரசா அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயலர் சீனிவாசன் தீர்மானங்கள் குறித்து விளக்கினார். பிப்., 15ல் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றகோரி ஜாக்டோ ஜியோ நடத்தும் ஒருநாள் போராட்டத்தில் பங்கேற்பது, பிப், 16ல் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது, பிப்., 26ல் ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற போராட்டத்தில் பங்கேற்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் சக்தி வேல் நன்றி கூறினார்.

