புத்தக திருவிழா எழுத்து வடிவில் நின்று விழிப்புணர்வு
புத்தக திருவிழா எழுத்து வடிவில் நின்று விழிப்புணர்வு
UPDATED : பிப் 05, 2024 12:00 AM
ADDED : பிப் 05, 2024 09:36 AM
சிவகங்கை:
சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடக்கும் புத்தக திருவிழா விழிப்புணர்வுக்காக சிலம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.பபாசியுடன் மாவட்ட நிர்வாகம், கல்வி, நுாலகத்துறை இணைந்து ஜன., 27 முதல் பிப்., 6 வரை புத்தக கண்காட்சி மற்றும் திருவிழா நடைபெற்று வருகிறது. தினமும் காலை 10:00 முதல் இரவு 10:00 மணிவரை 110 ஸ்டால்களில் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசகர்கள் பார்வையிட்டு, வாங்கி செல்கின்றனர். தினமும் காலையில் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் பெருந்திறள் வாசிப்பு நடைபெறும். கலைநிகழ்ச்சிகள், பேச்சாளர்களின் சிறப்புரை நடைபெறும்.புத்தகம் வாசிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிலம்பம் மூலம் மாணவர்களின் விளக்கினர். கலெக்டர் ஆஷா அஜித் ஆலோசனைபடி, கலெக்டர் பி.ஏ., (வளர்ச்சி) வீரராகவன் துவக்கி வைத்தார்.சிலம்பம் சுற்றும் மாணவர்கள் சிலம்பம் சுற்றியபடியே புத்தக திருவிழா என்ற எழுத்து வடிவில் நின்று விழிப்புணர்வு அளித்தனர். மேலும், சிலம்பம் சுற்றிக்கொண்டே திருக்குறள்களை வாசித்து, விழிப்புணர்வு வழங்கினர். இதில் சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்புத்துாரை சேர்ந்த 500 சிலம்ப மாணவர்கள் பங்கேற்றனர். மல்லர் கயிறு, கம்பம், வாள்வீச்சு உள்ளிட்ட பாரம்பரிய வீரவிளையாட்டு நிகழ்ச்சிகளும் நடந்தது.சிலம்ப மாணவர்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

