sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மூளைக்கு அறிவியல்; இதயத்துக்கு அற நுால்கள்

/

மூளைக்கு அறிவியல்; இதயத்துக்கு அற நுால்கள்

மூளைக்கு அறிவியல்; இதயத்துக்கு அற நுால்கள்

மூளைக்கு அறிவியல்; இதயத்துக்கு அற நுால்கள்


UPDATED : பிப் 06, 2024 12:00 AM

ADDED : பிப் 06, 2024 09:39 AM

Google News

UPDATED : பிப் 06, 2024 12:00 AM ADDED : பிப் 06, 2024 09:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:
மனிதனுக்கு எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கடந்த கால அனுபவங்களோடு எடுத்து தருபவை தான் இலக்கியங்கள் என பட்டிமன்ற நடுவர் ராமலிங்கம் பேசினார்.திருப்பூர் புத்தக திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்பதற்குக் காரணம் கருத்து வளமா, கற்பனை திறனா எனும் தலைப்பில், பட்டிமன்றம் நடந்தது. கருத்து வளமே எனும் தலைப்பில், திருத்தணி தனியார் கல்லுாரி முதல்வர் வேதநாயகி, ஆற்காடு இலக்கிய அமைப்பின் தலைவர் சதாசிவம்; கற்பனை திறனே எனும் தலைப்பில், தமிழாசிரியர் வாசுசசிகுமார், பேராசிரியர் ஜெயஸ்ரீ ஆகியோர் வாதிட்டனர்.நடுவர் ராமலிங்கம் பேசியதாவது:
உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொது மொழி புன்னகை. ரசனையும், சிரிப்பும் இல்லாத வாழ்வு வாழ்வாக இருக்க முடியாது. விழுந்து விழுந்து சிரியுங்கள்;எந்த நேரத்திலும் விழுந்தவனை பார்த்து சிரிக்கக்கூடாது. குழந்தைகளுடன் நேரத்தை செலவழியுங்கள்; அதனை விட மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது.எவ்வளவு நேரம் படித்தோம் என்பது முக்கியமல்ல; எதனை படித்தோம் என்பது தான்.மனதை பக்குவப்படுத்துவது தான், நுால்கள், புத்தகங்கள். மனதில் கவலையென்னும் குப்பையை கொட்டி நிறைக்காதீர். புத்தகத்தை படித்து, அறிவை விரிவு செய்; அறம் செய்ய விரும்புவதை விட நல்லொழுக்கம் வேறு ஒன்றுமில்லை.காயப்படாத, நியாயப்படுத்திய வார்த்தைகளை பேச பழகினால், அவன் தான் புனிதன்; மனிதன் என்று மதிக்கப்படுபவன். இலக்கியம் இதய வாசலை திறந்து வைக்கிறது.மூளைக்கு அறிவியல்; இதயத்துக்கு அறநுால்கள். ஒரு சிறந்த நுால் படைப்பாளனுடைய சுக பிரசவத்தில் பிறக்கும் குழந்தை. நுால் ஒருவனை சிறந்த நிலைக்கு கொண்டு செல்லும். நல்ல வார்த்தைகளையும், நல்லொழுக்கத்தையும் கற்றுத்தருகிறது.சொத்து வேண்டாம் என துாக்கி எறிந்து சொந்தங்கள் பெருகும் நுால் தான் ராமாயணம்; சொத்து வேண்டும் வேண்டும் என போராடினால், சொந்தங்கள் அழியும் என எச்சரிக்கை தருவது தான் மகாபாரதம்.மனிதனுக்கு எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கடந்த கால அனுபவங்களோடு எடுத்து தருபவை தான் இலக்கியங்கள்.இவ்வாறு, ராமலிங்கம் பேசினார்.பட்டிமன்ற நிறைவில், இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்பதற்குக் காரணம் கருத்து வளமே என தீர்ப்பளித்தார்,ராமலிங்கம்.






      Dinamalar
      Follow us