sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களின் சிந்தனைக்கு புது தளம்

மாணவர்களின் சிந்தனைக்கு புது தளம்

மாணவர்களின் சிந்தனைக்கு புது தளம்


UPDATED : பிப் 06, 2024 12:00 AM

ADDED : பிப் 06, 2024 09:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 06, 2024 12:00 AM ADDED : பிப் 06, 2024 09:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சேலம்:
மாணவர்களின் யோசனையை அறிவியல் படைப்புகளாக மாற்ற, அரசு தரப்பில் புது தளம் ஏற்படுத்தி தரப்படும் என அமைச்சர் மகேஷ் பேசினார்.சேலத்தில் டார்வின் அறிவியல் மன்றம் சார்பில், அறிவியலை கொண்டாடுவோம் தலைப்பில் கலந்துரையாடல் நேற்று நடந்தது. அதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தலைமை வகித்து பேசியதாவது:
மாணவர்களின் யோசனையை அறிவியல் படைப்புகளாக மாற்ற, அரசு தரப்பில் புது தளம் ஏற்படுத்தி தரப்படும். அவர்களின் சிந்தனைகள், வீட்டுக்குள் முடிந்துவிடாமல் அதை செயல்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள், பகுத்தறிவுடன் சிந்திப்பது விஞ்ஞானத்துக்கு ஒப்பானது.வானவில் மன்றம் மூலம், 710 கருத்தாளர்களை கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் கணிதம், அறிவியல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புற மாணவர்களையும் அறிவியல் சென்றடைய, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சந்திரயான் போன்ற விண்வெளி திட்டங்களில் அரசு பள்ளியில் படித்தவர்களின் பங்களிப்பு உள்ளது மகிழ்ச்சி. இஸ்ரோ சென்ற ஆசிரியர்கள், வழிகாட்டியாக இருந்து, அவர்களது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். கண்டுபிடிப்புகளை உருவாக்குவதோடு அதற்கான காப்புரிமை பெற வேண்டும். அதற்கான வழிமுறைகளை, ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து தேசிய அளவில், கலா உத்சவ் போட்டி, மாநில அளவில் கலை திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், பெங்களூரு பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாடு அமைப்பின் இயக்குனர் டில்லிபாபு, மன்ற இணை செயலர் முனீஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us