sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு மாணவர் விடுதியில் சமையலர் பணியிடம் காலி மாணவர்கள் சிரமம்

அரசு மாணவர் விடுதியில் சமையலர் பணியிடம் காலி மாணவர்கள் சிரமம்

அரசு மாணவர் விடுதியில் சமையலர் பணியிடம் காலி மாணவர்கள் சிரமம்


UPDATED : பிப் 08, 2024 12:00 AM

ADDED : பிப் 08, 2024 09:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 08, 2024 12:00 AM ADDED : பிப் 08, 2024 09:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்:
பெரியகுளம் அரசு பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் சமையலர், வாட்ச்மேன் பணியிடங்கள் காலியாக உள்ளதால் விடுதியில் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.பெரியகுளம் அரசு பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதி, அரசு மேல்நிலைப்பள்ளி நியூகிரவுண்ட் மைதானம் அருகே 20 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு கொடைக்கானல் மலை அடிவாரம் வெள்ளகெவி, பூண்டி,கிளாவரை, அடுக்கம், மன்னவனூர் பகுதிகளில் உள்ள விவசாய தொழிலாளர்கள் பிள்ளைகள் 32 பேர் விடுதியில் தங்கி படிக்கின்றனர்.விடுதியில் ஒரு வார்டன், இரு சமையலர், ஒரு தூய்மை பணியாளர், ஒரு வாட்ச்மேன் என 5 பேர் பணியில் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவு சமைத்து வழங்க வேண்டும்.பணியிடம் காலி
இங்கு இரு சமையலர், வாட்ச்மேன் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகளான வார்டன், தூய்மை பணியாளர் ஆகிய இருவர் அனைத்து பணிகளும் செய்யவேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு உரிய நேரத்தில்உணவு சமைத்து பறிமாறுவதில் சிரமம் ஏற்படுகிறது.சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பழுது ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் தூய்மையின்றி செல்லும் வராகநதியை குடிநீராக பயன்படுத்தும் நிலை உள்ளது. மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறை நிர்வாகம் சமையலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us