UPDATED : பிப் 08, 2024 12:00 AM
ADDED : பிப் 08, 2024 09:42 AM
சென்னை:
கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையின சான்றிதழ் வழங்குவதற்காக, தமிழக மின் ஆளுமை முகமை வாயிலாக, வலைதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.கல்வி நிறுவனங்கள் இனி இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து, எளிய முறையில், வெளிப்படை தன்மையுடன் சான்று பெற்றுக் கொள்ளலாம். இந்த வலைதளத்தை, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் நேற்று தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதேபோல, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியையும் அமைச்சர் மஸ்தான் நேற்று துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன மேலாண் இயக்குனர் மகேஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.