UPDATED : பிப் 08, 2024 12:00 AM
ADDED : பிப் 08, 2024 09:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்வழிக் கல்விக்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்கிற சட்டத் திருத்தம் அவசியம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், 1,021 அரசு டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டதில், தமிழ் வழிக் கல்விக்கான 20 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை. தகுதியானவர்கள் யாரும் இல்லை என்பதால், அந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக, அரசு அறிவித்துள்ளது. மருத்துவப் படிப்பு, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது. எனவே, மருத்துவப் படிப்புக்கு முந்தைய நிலை வரை உள்ள படிப்புகளை, தமிழ் வழியில் படித்திருந்தாலே, அவர்களுக்கு தமிழ்வழிக் கல்விக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அதற்கேற்ப சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுத்துள்ளது..