பொது தேர்வில் தில்லுமுல்லு நடந்தால் மாவட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை
பொது தேர்வில் தில்லுமுல்லு நடந்தால் மாவட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை
UPDATED : பிப் 08, 2024 12:00 AM
ADDED : பிப் 08, 2024 09:45 AM
சென்னை:
தமிழக பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வுகள் மார்ச்சில் நடக்கின்றன. இவற்றில், 25 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேர்வுத்துறை சார்பில், நேற்று முன்தினம் திருச்சியில், உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பள்ளிக்கல்வி மற்றும் அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அமைச்சர் மகேஷ், துறை செயலர் குமரகுருபரன் ஆகியோரும் ஆலோசனை வழங்கினர்.அப்போது, பொது தேர்வில் கடந்த ஆண்டு நடந்த முறைகேடு போன்று, இந்த ஆண்டு நடக்காமல், எந்த இடத்திலும் குழப்பம் இன்றி, தேர்வை நடத்த அறிவுறுத்தப்பட்டது.* தேர்வில் முறைகேடுகள் இல்லாத அளவுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்* தேர்வுத்துறை விதிகளை தேர்வின்போது முறையாக பின்பற்ற, வேண்டும்.புகார்கள் எழுந்தல், கண்காணிப்பாளர் மட்டுமின்றி, மையத்தை நிர்வகிக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.