UPDATED : பிப் 09, 2024 12:00 AM
ADDED : பிப் 09, 2024 05:08 PM
ராமநாதபுரம்:
புத்தகங்களுக்காக செலவிடப்படும் தொகை என்பது செலவல்ல... அது முதலீடு, என்கிறார் அறிஞர் எமர்சன்.ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும் போது வரும் முன்பணத்தில் நுாறு டாலருக்கு புத்தகம் வாங்குவேன் என்கிறார் நடிகர் சார்லி சாப்ளின்.இத்தகைய சிறப்பு மிக்க புத்தக வாசிப்பின் அருமை, நுால்களின் பெருமையை சிறியோர் முதல் பெரியோர் வரை அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம், கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் இணைந்து ராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் பிப்.12 வரை புத்தக திருவிழாவை தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடத்துகின்றனர். எனவே புத்தகங்களை வாங்கி சுவாசியுங்கள் உங்கள் வாழ்க்கை சிறக்கும்.தேர்விற்கு உதவும் புத்தகங்கள்
ஆர். ரம்யா, கல்லுாரி மாணவி, பாண்டியூர்:
ஆண்டுதோறும் புத்தக திருவிழாவிற்கு தோழிகளுடன் வருகிறேன். இவ்வாண்டு புதிதாக டிஜிட்டல் நுாலக அரங்கம் போட்டித்தேர்வுக்கு தயராகுவோருக்கு உதவியாக உள்ளது. யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட அரசு தேர்வுகளுக்கு உதவும் புத்தங்கள் வாங்கியுள்ளேன். நாவல்கள், கிரைம் ஸ்டோரி புத்தகங்கள் பிடிக்கும். வரலாறு கூறும் புத்தகங்கள்எம்.எஸ்.சுவேதா, கல்லுாரி மாணவி, மேதலோடை:
அகநானுாறு, புறநானுாறு, போட்டித்தேர்விற்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. நான் அரசு போட்டித்தேர்வுக்கு உதவும் புத்தகங்களை வாங்கினேன். குழந்தைகளுக்கான அறிவுக்கதைகள், சிறுகதை புத்தகமும் வாங்கியுள்ளேன். வரலாறு, வனத்துறை போன்ற அரங்குகளில் ராமநாதபுரம் கடல் வளம், வரலாற்றை தெரிந்து கொண்டேன். அறிவு வளர்க்கும் புத்தகங்கள் ஆர்.விக்னேஷ், ஐ.டி., நிறுவன பணியாளர், ராமநாதபுரம்:
சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணி புரிகிறேன். புத்தக திருவிழாவிற்கு நண்பர்களுடன் வந்துள்னேன். இங்கு மாணவர்களைக் கவரும் வகையில் ஓவியக் கண்காட்சி, அறிவியல் அரங்கம் அமைத்துள்ளனர். எனது பணி சார்ந்த கணினி மொழி புத்தகங்களை வாங்கியுள்ளேன்.வாசகர்களின் கவனம் ஈர்த்த புத்தகங்கள்
ஆன்மிகம் அறிந்ததும் அறியாததும் தினமலர் நாளிதழில் வெள்ளி தோறும் வெளி வரும் ஆன்மிக மலர் கேள்வி-பதில் தொகுப்பு ஆன்மிகம் அறிந்ததும் அறியாததும், என வெளியிடப்பட்டுள்ளது. ஆன்மிகம், ஜோதிடம், வாஸ்து, பரிகாரம் என பல வகை வாசகர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்ககள், கேள்விகளுக்கு சுற்றி வளைத்து மூக்கைத் தொடாமல் தெளிவான, திடமான பதில்கள் இந்த நுாலின் பதிவாகும். ஆசிரியர்:
மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் வெளியீடு :
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் விலை :
ரூ.310.செல்லாத பணம்
- இந் நாவல் 2020ல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றுள்ளது. தனது வர்க்கத்துக்குக் குறைவான ஒரு பர்மா அகதியை ஜாதி கடந்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண், தன்னைச் சுற்றியுள்ள சமூக மதிப்பீடுகளுக்கு எப்படி தன்னை பலிகொடுக்க வேண்டி உள்ளது என்பதை ஆழமாக கூறுகிறது. இந்நாவல் மனித அனுபவத்தின் முழுமையான பதிவாகும்.ஆசிரியர் :
இமையம் வெளியீடு :
க்ரியா பப்ளிகேஷன்விலை :
ரூ.375கனவு ஆசிரியர்
- ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும். அவருக்கான இலக்கணம் என்னவென்று வரையறுப்பது கடினம். சமூக தளத்தில், பண்பாட்டு வெளியில் நீண்ட காலமாக இயங்கி கொண்டிருப்பவர்களின் செறிவான அனுபவங்களின் வழியே கனவு ஆசிரியரை காண்பது சாத்தியம். இதை மனதிற்கொண்டு ஆசிரியர்களுக்கு பயன்தரத்தக்க வகையில் இப்புத்தகம் உள்ளது. ஆசிரியர் :
க.துளசிதாசன்வெளியீடு :
பாரதி புத்தகாலயம்விலை :
ரூ.140ரூ.1000 புத்தகங்கள் இலவசம்
புத்தகத்திருவிழா அரங்கு 32 ல் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு தினமலர் நாளிதழின் ஆண்டு சந்தா தொகை ரூ.1999 அல்லது ஆன்-லைன் அல்லது காசோலை மூலம் செலுத்தினால் ரூ.1000 மதிப்புள்ள புத்தகம் தேர்வு செய்து இலவசமாக பெறலாம். இங்கு இடம் பெற்றுள்ள புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி உண்டு.