முறைகேடுகள் நிரூபணம்: சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் சஸ்பெண்ட்
முறைகேடுகள் நிரூபணம்: சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் சஸ்பெண்ட்
UPDATED : பிப் 09, 2024 12:00 AM
ADDED : பிப் 09, 2024 05:14 PM
சென்னை:
பல்வேறு முறைகேடுகளை செய்ததாக எழுந்த புகார் நிரூபணமானதால் சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்ய துணைவேந்தருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது பல்வேறு முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை தமிழக உயர்கல்வித்துறை அமைத்தது. அக்குழு வெளியிட்ட அறிக்கையின்படி, பதிவாளர் தங்கவேல் மீதான புகாரின் அடிப்படையில் 8 குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 2 குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மேலும், நிரூபணமான குற்றச்சாட்டுகள் கடுமையானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முறைகேடு புகார்கள் நிரூபணமானதால் பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய பல்கலை துணைவேந்தருக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தங்கவேல் விரைவில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.