UPDATED : பிப் 11, 2024 12:00 AM
ADDED : பிப் 11, 2024 09:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
ஸ்டெப் அப் வித் எ ஸ்டார்ட் அப் கருத்தரங்கு, கோவை அவிநாசி சாலையிலுள்ள இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடந்தது. ஸ்டார்ட் அப் தமிழ்நாடு மற்றும் கே.எஸ்.ஆர்.அண்டு கோ நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தியது.கே.எஸ்.ஆர்., நிறுவனங்களின் பங்குதாரர் ரவிச்சந்திரன், கருத்தரங்கு குறித்தும், ஸ்டார்ட் அப் கொள்கைகள் குறித்தும் பேசினார். ஸ்டார்ட் அப் நிதி பெருக்கம் குறித்து, ராமகிருஷ்ணன் கல்யாணராமன், தொழில் சேமிப்பு மற்றும் ஊக்குவிப்பு குறித்து விஷ்ணுசஹஸ்ரநாமம், ஸ்டார்ட் அப் வரிவிலக்கு குறித்து கிருஷ்ணசாமி ரவி பேசினர்.ஸ்டார்ட்அப் துவங்கும் தொழில்முனைவோர் திரளாக பங்கேற்று, ஆலோசனை பெற்றனர்.