பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு
பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு
UPDATED : பிப் 11, 2024 12:00 AM
ADDED : பிப் 11, 2024 09:42 AM
திருப்பூர்:
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு, இன்று(11ம் தேதி) நடக்கிறது.திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலனுக்காக, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும் ஸ்ரீஹயக்ரீவர் வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான சிறப்பு வழிபாடு, இன்று நடக்கிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, இன்றும், வரும், 18ம் தேதியும்; பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, வரும், 25ம் தேதி மற்றும் மார்ச், 3ம் தேதியும், சிறப்பு வழிபாடு நடக்கிறது.பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், காலை, 9:00 மணிக்கு துவங்கும், ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவர் வழிபாட்டில் பங்கேற்று பயன்பெறலாம் என, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.