UPDATED : பிப் 11, 2024 12:00 AM
ADDED : பிப் 12, 2024 09:17 AM
பெங்களூரு:
கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் நடக்கும் ஊழலால், மாணவர்கள் கொதிப்படைந்துள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்துடன் அரசு விளையாடுகிறது என எதிர்க்கட்சி துணைத்தலைவர் அரவிந்த் பெல்லத் தெரிவித்தார்.இது குறித்து, எக்ஸ் வலைதளத்தில் நேற்று அவர் கூறியதாவது:
கே.பி.எஸ்.சி.,யில் நடக்கும் ஊழலால், மனம் வருந்தும் மாணவர்கள், என்னை சந்தித்து அநியாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, அரசுக்கு நெருக்கடி கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.மாநில அரசு எங்கெங்கு கொள்ளை அடிக்க முடியுமோ, அஙகெல்லாம் ஏஜென்டுகளை நியமிக்கிறது. இவர்களில் சிவசங்கரப்பா ஒருவர். கே.பி.எஸ்.சி.,யின் மோசமான நிர்வாகம், ஊழலால் மாநில மாணவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் அரசு, அதற்காக வெட்கப்பட வேண்டும்.கே.பி.எஸ்.சி.,யின் இன்னாள் தலைவர் சிவசங்கரப்பாவை நீக்க வேண்டும். இங்கு நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும். நேர்மையான அதிகாரி லதா குமாரியை நியமிக்க வேண்டும். இந்த விஷயத்தின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் நாட்களில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.